தமிழ்நாடு

பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜீ தொலைக்காட்சிக்கு பாஜக ஐடி விங் கடிதம்

Published

on

சிறுவர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக காட்டிய ஜீ தொலைக்காட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக ஐடி விங், ஜீ தொலைக்காட்சிக்கு கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் நகைச்சுவை என்ற பெயரில் சிறுவர்கள் பிரதமர் மோடி குறித்தும் இந்தியாவின் திட்டங்கள் குறித்தும் கேலியும் கிண்டலும் செய்த காட்சிகள் இருந்தன.

இந்த காட்சியை அந்த காட்சியில் நடித்த பெற்றோர்கள் உள்பட பார்வையாளர்கள் ரசித்தனர் என்பதும் ஜ்ட்ஜ்கள் என்று சொல்லக்கூடிய இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களும் கைத்தட்டி சிரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஏற்கனவே பாஜக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில் தற்போது பாஜக ஐடி விங் தமிழக தலைவர் சிடி நிர்மல் குமார் என்பவர் ஜீ தொலைக்காட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி குறித்து நகைச்சுவை என்ற பெயரில் சிறுவர்களை வைத்து அவதூறு பரப்பிய ஜீ தொலைக்காட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் ஆகியோருக்கும் அவர் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் கடிதத்திற்கு ஜீ தொலைக்காட்சி நிர்வாகம் என்ன விதமான நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version