தமிழ்நாடு

பாஜகவில் பெண்களுக்கு மதிப்பு இல்லை, பணம் தான் எல்லாம்… கொத்தாக அதிமுகவில் இணைந்த பாஜக பெண் நிர்வாகிகள்!

Published

on

அதிமுக பாஜக இடையேயான உறவு நீறு பூத்த நெருப்பாக உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகிகள் 100 பேர் மொத்தமாக அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.

#image_title

பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார், அவரை தொடர்ந்து செயலாளராக இருந்த திலீப் குமார் ஆகியோர் அடுத்தடுத்து பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலையை விமர்சித்துவிட்டு அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டதில் இருந்து அதிமுக-பாஜக இடையே கூட்டணி விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக, பாஜக ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இன்னொரு பக்கம் பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைந்துகொண்டு தான் இருந்தார்கள். ஒருவழியாக அதிமுக-பாஜக இடையே வார்த்தை மோதல்கள் சற்று ஓய்ந்து இருக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட பாஜக பெண் நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பெண் நிர்வாகிகள், பாஜகவில் பெண்களுக்கு மதிப்பு இல்லை, உழைப்பவர்களை மதிப்பதில்லை, பணம் இருப்பவர்களுக்கே மதிப்பு கிடைக்கிறது. எனவே சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவில் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். அதிமுக மட்டுமே எங்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பையும் தரும் என்றார்கள்.

Trending

Exit mobile version