செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் பேச்சுவார்த்தையில் இழுபறி.. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் பாஜக?

Published

on

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில், அதிமுக-பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால் இதுவரை சுமூக முடிவு எட்டப்படவில்லை.

கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று இரவு திடீரென அதிமுக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிலையில் பாஜக அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

20 சதவீத நகர்புற உள்ளாட்சி இடங்களை பாஜக கேட்கிறது. மேலும், கொங்கு மண்டல இடத்தில் அதிக இடங்களையும் பாஜக கேட்கிறது. ஆனால், இதை கொடுக்க அதிமுக மறுத்துவிட்டது. 5 சதவீத இடங்களை மட்டுமே கொடுப்போம் என் கறார் காட்டுகிறது அதிமுக. எனவே, தற்போதுவரை பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

விரைவில், அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறி தனித்து போட்டியிம் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version