தமிழ்நாடு

தமிழிசைக்கு கல்தா: புதிய தலைமைக்கு தயாராகிறது தமிழக பாஜக!

Published

on

தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசைக்கு பதிலாக புதிய தலைவரை நியமிக்க பாஜக தேசிய தலைமை திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்று பெரும்பான்மையோடு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வியை சந்தித்தது.

இதனால் பாஜக தேசிய தலைமை தமிழக பாஜக தலைமை மீதும், பாஜக நிர்வாகிகள் மீதும் அதிருப்தியில் உள்ளது. இதனையடுத்து பாஜகவை பலப்படுத்த உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட பாஜக தலைமை அறிவுறுத்தியது. இதனையடுத்து உறுப்பினர் சேர்க்கையில் தமிழக பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் அதன் ஒரு கட்டமாக தற்போது உள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசையையும் மாற்ற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இருப்பதால் அடுத்த தலைவருக்கு தமிழக பாஜக தயாராகிவிட்டதாம். தலைவர் மட்டுமல்லாமல் சில முக்கிய நிர்வாகிகளையும் மாற்ற பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து சில முக்கிய புள்ளிகள் தலைவர் பதவிக்காக டெல்லி தலைமையை அனுகியதாக தகவல்கள் வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version