தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் பாஜக? 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு குறி!

Published

on

இந்தியா முழுவதும் வலுவாக காலூன்றி வரும் பாஜக தமிழகத்தில் மட்டும் காலூன்ற முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் செல்ல அதிரடி திட்டம் ஒன்றை பாஜக வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் பாஜக ஏறக்குறைய 20 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கூட தனது அரசியல் ராஜ தந்திரத்தை பயன்படுத்தி ஆட்சி செய்து வருகிறது பாஜக. மேற்குவங்கம், புதுச்சேரி, கேரளா என பாஜக காலூன்ற சிரமமாக இருந்த மாநிலங்களிலும் ஓரளவுக்கு முன்னேறி வருகிறது. ஆனால் தமிழக சட்டசபையில் மட்டும் பாஜக நுழைய முடியாமல் தவித்து வருகிறது.

இந்த குறையை போக்க அதிரடி திட்டம் ஒன்றை பாஜக வகுத்துள்ளது. பாஜகவுக்கு அதிமுகவில் இருக்கும் பலத்தை பயன்படுத்தி சில எம்எல்ஏக்களை இழுத்து சட்டசபையில் நுழையலாம் ஆனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் படி அவர்களது பதவி பறிபோகும். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கட்சி தாவினால் அந்த சட்டத்தின் படி அவர்களது பதவி பறிபோகாது. எனவே அதிமுகவின் 40 எம்எல்ஏக்களை இழுத்தால் தான் பாஜகவின் திட்டம் நிறைவேறும்.

ஆனால் அது பாஜகவால் முடியாது என்பதால் பாஜகவின் பார்வை தற்போது தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களின் மீது விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள 7 பேர் உள்ளனர். அதில் குறைந்தது 3 பேரை பாஜக தங்கள் பக்கம் இழுத்தாலே போதும். அவர்கள் மீது கட்சி தாவல் தடைச்சட்டம் பாயாது. ஒரு கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அணி மாறினால் அவர்களின் பதவி பறிபோகாது என்பது விதி. இதனை பயன்படுத்தி மத்திய பாஜக, தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களை குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version