இந்தியா

மோடி பதவியேற்பு: அதே நேரத்தில் பாஜக இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

Published

on

பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக இன்று பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 58 பேர் இன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழா நடந்த நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழா. இந்த விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள் பலரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

சரியாக 7 மணிக்கு விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். மோடி பதவியேற்ற பின்னர் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இன்று மொத்தம் 58 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். 25 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், 9 பேர் சிறப்பு அமைச்சர்களாகவும் என 58 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். மோடியின் பதவியேற்பு விழா நடந்து வந்தபோது பாரதிய ஜனதா கட்சியின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கிய சம்பவமும் நடந்துள்ளது.

பாஜக இணையதளத்தை முடக்கிய ஹேகர்கள் அதில் பாஜகவுக்கு எதிரான மாட்டிறைச்சி உணவுகள் குறித்தும், அதனை செய்வது எப்படி என்பது குறித்தும் விவரித்து பதிவிட்டுள்ளனர். பாஜகவை சீண்டும் விதமாக அவர்களது இணையதளத்து முடக்கி அதில் மாட்டிறைச்சி குறித்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version