தமிழ்நாடு

சசிகலாவுடன் நடிகை விஜயசாந்தி சந்திப்பு: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியா?

Published

on

அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவை பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான விஜயசாந்தி இன்று சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவி லாவண்யா குறித்து விசாரணை செய்ய வந்த குழுவில் இருப்பவர்கள் ஒருவர் விஜயசாந்தி என்பதும் கடந்த சில நாட்களாக இவர் இது குறித்து விசாரணை செய்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை விஜயசாந்தி இன்று திடீரென சசிகலாவை சந்தித்துள்ளார். ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் என்ற லெட்டர் பேடில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வரும் சசிகலாவை பாஜக நிர்வாகி விஜயசாந்தி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ள பாஜக வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இருப்பினும் இந்த சந்திப்பு எதிர்கால கூட்டணிக்கு உதவிகரமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த நடிகை விஜயசாந்தி மரியாதை நிமித்தமாகவே சசிகலாவை சந்தித்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version