தமிழ்நாடு
ரஜினியை வைத்து அரசியல் இல்லை சினிமா மட்டுமே செய்வார்கள்..!
பாஜக-வினர் ரஜினியை அரசியல் இல்லை சினிமா வேண்டுமானால் செய்வார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்கியுள்ளார். பிராசாரத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் கலந்துரையாடிய கமல்ஹாசன் பல கேள்விகளுக்கும் பதிலளித்தார். ரஜினிகாந்த உடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு கமல், “பாஜக ரஜினியை வைத்து சினிமா மட்டும் வேண்டுமானால் எடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், “ரஜினியை வைத்து பாஜக அரசியல் எல்லாம் செய்ய மாட்டார்கள். நான் நிச்சயம் வருகிற தேர்தலில் போட்டி இடுகிறேன். விரைவில் போட்டியிடும் தொகுதி விவரங்களை அறிவிக்கிறேன். தொடர்ந்து மேல்மட்ட ஊழலுக்கு எதிராக செயல்படுவேன்” எனத் தெரிவித்தார்.
எழுச்சிக்கு முன்னுரை எழுதியாகிவிட்டது.நேற்று வைகை நகரில், @maiamofficial இன் கூட்டத்தில் கடலலைகள் பார்த்தீர்கள்.இன்று உசிலம்பட்டித் தெருக்களில், ஊழலுக்கு எதிரான திரட்சியைப் பார்க்கிறேன். இன்னும் இடையூறு செய்யுங்கள்…
தடைகளைத் தாண்டி எங்கள் மடைகள் பாயும்.#சீரமைப்போம்_தமிழகத்தை— Kamal Haasan (@ikamalhaasan) December 14, 2020