இந்தியா

தாக்குதலை வைத்து அரசியல் செய்யும் பாஜக முன்னாள் முதல்வரின் சர்ச்சை பேச்சு!

Published

on

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒன்றை நடத்தியது. பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்திய இந்தியா தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானி அபினந்தனை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை வைத்து பாஜகவினர் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாகிஸ்தான் உடனான இந்த விவகாரத்தை வைத்து வரும் மக்களவை தேர்தலில் பாஜக 22 இடங்களில் வெற்றி பெரும் என தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என கூறினார். இது நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமரின் இந்த கருத்தை இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். இதனால் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் இப்போது 22-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக எளிதாக வெற்றிபெறும் என்றார் எடியூரப்பா.

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட இந்த தாக்குதலை யாரும் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்ற கருத்து அதிகமாக தற்போது எழுந்து வருகிறது. ஆனால் பாஜகவினர் தொடர்ந்து இதனை வைத்து அரசியல் லாபம் பார்க்கும் முயற்சியில் ஈடுபடுவது நடந்துதான் வருகிறது. இந்நிலையில் எடியூரப்பா கூறிய இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version