தமிழ்நாடு

புதுவையில் பாஜக ஆட்சி அமைக்க முயற்சியா? பரபரப்பு தகவல்!

Published

on

புதுவையில் என்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் திடீரென பாஜக அங்கு ஆட்சி அமைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி 6 தொகுதிகளிலும் சுயேச்சைகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் திமுக 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பாஜகவின் 6 எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சைகளின் உதவியால் புதுவையில் பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.

புதுவையில் ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நியமன உறுப்பினர்கள் இரண்டு பேரை நியமிக்கவும் அனுமதி உண்டு என்பதால் சுயேட்சைகள் 6 பேர் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் 6 மற்றும் நியமன உறுப்பினர்கள் 2 என மொத்தம் 14 உறுப்பினர்கள் இருப்பதால் இன்னும் இரண்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைக்க முயற்சித்து வருவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்கள் மூலம் கசிந்து வருகிறது.

ஆனால் இந்த தகவலை பலர் மறுத்து வருகின்றனர். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் ரங்கசாமி தான் முதல்வர் என்றும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் புதுவையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version