தமிழ்நாடு

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக தீர்மானம்: இந்த இரண்டு காரணங்கள் தான்!

Published

on

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சூர்யா கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே. நீட் தேர்வு, புதிய கல்வி திட்டம், ஒளிப்பதிவு சீர்திருத்தம் ஆகியவை குறித்து அவர் பதிவு செய்த அறிக்கைகள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கல்வித் திட்டம் குறித்து சூர்யா வெளியிட்ட ஒரு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அவரது கருத்துக்களை பல கல்வியாளர்களை ஒப்புக்கொண்டு அதன் பின்னர் புதிய கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நீட் தேர்வுக்கு எதிராக ஆரம்பம் முதலே சூர்யா தனது கருத்தை வலுவாக வைத்து வருகிறார் என்பதும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து அவர் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு உள்பட பல விஷயங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட வரைவுக்கு சூர்யதான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் அதன் பின்னரே பல திரையுலக பிரபலங்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நீட், புதிய கல்வித்திட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version