செய்திகள்

தீர்ப்பை பாஜக ஏற்க வேண்டும்.. தேர்தல் முடிவு பற்றி முதல்வர் பழனிச்சாமி பகீர்

Published

on

சென்னை: 5 மாநில தேர்தல் முடிவுகளில் மக்கள் தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நேற்று அதிமுக தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னையில் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி அளித்தார்.

அதில் 5 மாநில தேர்தல் முடிவுகளில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் முடிவே இறுதியானது. தமிழகத்தில் ஆனால் அந்த நிலை இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சிகள் தான் மேலோங்கி இருக்கும்.

கஜா பாதிப்பு அறிக்கை ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மத்திய அரசு அறிக்கையை ஆராய வேண்டும். நிவாரண நிதியாக மத்திய அரசு எவ்வளவு தருவார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

காவிரியில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடகா மதித்து நடந்த வரலாறு கிடையாது. மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்.காவிரி நீரை நம்பி தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன, என்று கூறியுள்ளார்.

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version