இந்தியா

உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் பாஜக!

Published

on

17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்த வாக்கு கணிப்புகள் தான் தற்போது அரசியலிலும் நாடு முழுவதும் முக்கிய பேச்சாக உள்ளது. வாக்கு கணிப்புகள் அனைத்தும் சொல்லி வைத்தார் போல் மத்தியில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறுகிறது. இதனால் பாஜக தரப்பு உற்சாகத்தில் இருந்தாலும் உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் உள்ளது. அரசியல் வட்டாரத்தில் விசாரித்ததில் கருத்துக்கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகளில் வேறு மாதிரியாக வரும் என கூறுகிறார்கள். இந்த வாக்கு கணிப்புகளுக்கு பின்னணியில் பாஜக உள்ளதாக பொதுவாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் என கூறியது. ஆனால் இது பலத்த விமர்சனங்களை பெற்றுள்ளதை பாஜக தரப்பு ரசிக்கவில்லை. அதே நேரத்தில் உளவுத்துறையும் ஒரு ரிப்போர்ட் அளித்துள்ளது. அதன்படி, பாஜகவுக்கு தனிப்பெரும்பாண்மைக் கிடைக்காது, தொங்கு பாராளுமன்றமே அமைக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தி வருவது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version