தமிழ்நாடு

பாஜகதான் அதிமுக அரசைக் காப்பாற்றியது- உண்மையைப் போட்டுடைத்த வானதி சீனிவாசன்!

Published

on

பாஜக சார்பில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வானதி சீனிவாசன், கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியும் கலந்து கொண்டார்.

கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கூட்டத்தில் பேசிய பாஜகவின் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், ‘அதிமுக அரசுக்கு இங்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது உண்மை தான். அப்போது பாஜகவின் டெல்லி தலைமைக்கு இங்குள்ள அமைச்சர்கள் பற்றியும் நிர்வாகம் பற்றியும் எடுத்துக் கூறினோம். ஏன் அதிமுக அரசு தொடர வேண்டும் என்று தெரிவித்தோம். அதன்படி தான், அதிமுக அரசை பாஜக காப்பாற்றியது’ என்றார்.

ஏற்கெனவே, அதிமுக, பாஜகவின் கைப்பாவையாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்து வரும் நிலையில், வெளிப்படையாகவே ‘நாங்கள் தான் அதிமுக அரசைக் காப்பாற்றினோம்’ என்று பாஜக சொல்வது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version