இந்தியா
தேசிய கட்சிகளில் அதிக சொத்து மதிப்புடன் பா.ஜ.க முதலிடம்.. எவ்வளவு தெரியுமா?
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இந்திய தேசிய அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிக சொத்து மதிப்புடன் பா.ஜ.க முதலிடம் பிடித்துள்ளது.
தேசிய கட்சிகள் சொத்து மதிப்பு பட்டியலில், பா.ஜ.க அதிகபட்சமாக 4,847.78 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து 2வது இடத்தில் 698.33 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளது.
காங்கிரஸ் கட்சி 588.16 கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளது.
மொத்தம் உள்ள 7 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு 6,988.57 கோடி ரூபாயாக உள்ளது.