தமிழ்நாடு

தமிழகத்தை பிரித்து ‘கொங்குநாடு’: தீர்மானம் போட்ட பாஜக!

Published

on

தமிழகத்தை பிரித்து கொங்குநாடு என்ற புதிய யூனியன் பிரதேசம் உருவாக்கப்படும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென கொங்குநாடு குறித்த தீர்மானத்தை பாஜக நிறைவேற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் கொங்குநாடு என்ற புதிய வடிவில் யூனியன் பிரதேசம் அல்லது மாநிலமாக உருவாக்க வேண்டும் என பாஜக கோவை வடக்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவை மாவட்டம் அன்னூர் என்ற பகுதியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அதில் ஒன்று கொங்கு நாடு உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் தேசிய அளவில் உணர்ச்சிமயமான ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சட்டமன்றத் கூட்டத்தில் அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், அதற்கு உடந்தையாக இருந்த தமிழக அரசிற்கும் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை செயல் பேச்சளவில் இருந்த கொங்குநாடு தற்போது தீர்மானம் போடும் அளவிற்கு அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version