தமிழ்நாடு

இளம்பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம்: பாஜக தேர்தல் அறிக்கை!

Published

on

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளைப் பெற்று உள்ளது என்பதும் அந்த 20 தொகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குஷ்பூ, அண்ணாமலை, எல் முருகன் போன்ற நட்சத்திர வேட்பாளர்களும் இந்த கட்சியில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சற்று முன் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது அந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருவன:

* 18 முதல் 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம்

* விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கீட்டுடன், தனிபட்ஜெட் போடப்படும்

* ரேஷன்பொருட்கள் வீடு தேடி விநியோகிக்கப்படும்

* மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும்

* 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும் – பாஜக வாக்குறுதி

* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்

* தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான, பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

* தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்படும்; இந்துக் கோயில்களுக்கு தனி வாரியம் கொண்டு வரப்படும்; டெல்லி போல சென்னையும் மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்படும்.

* 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும்

* தமிழகம் முழுவதும் தேவையான அளவு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்;

* விவசாயிகளை போல மீனவர்களுக்கும் வருடாந்திர உதவித்தொகை ரூ.6,000 வழங்கப்படும்

* 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version