இந்தியா

மேற்குவங்க பாஜக பிரமுகர் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம்

Published

on

ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்தாம் கட்ட தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் கட்சி தலைவர்களும் பாஜக தலைவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனை அடுத்து நேற்று இரவு 8 மணி முதல் இரவு 8 மணி வரை அவர் பிரச்சாரம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜியை அடுத்து தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் ராகுல் சின்ஹா அவர்களும் 48 மணிநேரம் பிரச்சாரம் செய்ய தடை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இன்று பிற்பகல் 12 மணிமுதல் நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி வரை அவர் பிரச்சாரம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சிதல்குச்சி என்ற பகுதியில் குறைந்தது எட்டு பேரையாவது சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என ராகுல் சின்ஹா கருத்து தெரிவித்த நிலையில் இந்த தடை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version