இந்தியா

தேர்தல் சோதனையில் சிக்கிய பணம்.. பறித்துச் சென்ற பாஜகவினர்!

Published

on

தெலுங்கானா இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளருக்குச் சொந்தமான இடத்திலிருந்து காவல் துறையினர் கைப்பற்றிய பணத்தை, பாஜகவினர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி துப்பாக்கா. இந்த தொகுதி காலியாக உள்ள நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேவைக்கு அதிகமான பணம் வைத்துள்ளது மற்றும் கொண்டு சென்றால், சரியான ஆவணம் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்.

அப்படி பாஜக வேட்பாளராகப் போட்டியிடும், ரகுநந்தன் ராவ் என்பவருக்குச் சொந்தமான பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 18 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அப்போது காவல் துறையினரைச் சூழ்ந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் சிலர், காவல் துறையினரிடம் இருந்து 12 லட்சம் ரூபாயை பரித்துச்சென்றுள்ளனர்.

பணத்தை பரித்துச்சென்றவர்களை, கேமரா ஆதாரங்களைக் கொண்டு கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக முக்கிய நிர்வாகி பந்தி சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version