தமிழ்நாடு

ஹிஜாப்பை கழட்ட சொன்ன மேலூர் வார்டில் பாஜக டெபாசிட் காலி!

Published

on

தேர்தலின்போது வாக்களிக்க வந்த பெண் ஒருவரை ஹிஜாப்பை கழட்டச் சொன்ன வார்டில் பாஜகவுக்கு வெறும் 10 வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேலூரில் உள்ள ஒரு வார்டில் வாக்களிக்க வந்த பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்தார். அப்போது பாஜக முகவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை கடந்த நிலையில் ஹிஜாப் கழட்ட சொன்ன வார்டில் பாஜகவுக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலூர் 8வது வார்டில் பாஜக வேட்பாளர் 10 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் அங்கு திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். அதிமுக இரண்டாவது இடம் கிடைத்தது. ஹிஜாப் பிரச்சனையால் பாஜக வேட்பாளருக்கு டெபாசிட் காலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version