தமிழ்நாடு

அகில இந்தியத் திராவிட முன்னேற்ற காங்கிரஸ்: திமுகவை விமர்சிக்கும் பாஜக!

Published

on

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தாலும் பாஜக தான் இந்த ஆட்சியை இயக்குகிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் வலுவாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் இதனை தங்கள் பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பாஜக கொண்டு வந்த காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் 370 பிரிவை ரத்து செய்யும் மசோதாவை அதிமுக மாநிலங்களவையில் ஆதரித்தது. இதுகுறித்து அதிமுகவை விமர்சித்த ஸ்டாலின், அதிமுகவை அகில இந்தியப் பாரதிய ஜனதா கட்சி என்று தெரிவித்து கலாய்த்தார். இதற்கு தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து விமர்சித்துள்ளது.

கச்சத்தீவைக் காங்கிரஸ் தாரைவார்த்த பொழுது, நேருவின் மகளே வருக எனவும், இலங்கைப் படுகொலையின் பின் இந்திராவின் மருமகளே வருக என்றும் ஆரத்தி எடுத்த திமுக தலைவர் திமுகவின் பெயரை, அகில இந்தியத் திராவிட முன்னேற்ற காங்கிரஸ் என்று மாற்றியதும் சொல்லுங்கள், பரிந்துரைப்போம் என்று விமர்சித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version