தமிழ்நாடு

‘மாநிலம் பிரிப்பு… மக்களின் எதிர்பார்ப்பு’- பாஜக எம்.எல்.ஏ பேட்டி

Published

on

மாநிலத்தைப் பிரிப்பது என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் பட்சத்தில் அதைப் பிரிப்பது அரசின் கடைமையாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளார் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்.

தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக ‘கொங்குநாடு’ எனப் பிரிக்க வேண்டும் என்று சில வலதுசாரி சார்புடையவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.

திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து, இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று அழைத்து வருகிறது. இப்படிச் சொல்வதால் கொதிப்படைந்துள்ள வலதுசாரிகள், ‘கொங்குநாடு’ கோஷத்தை எழுப்பி உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இது குறித்து நயினார் நாகேந்திரன், ‘தமிழ்நாட்டில் கொங்கு நாடு மட்டுமா இருக்கிறது. வருஷ நாடு உள்ளது, வளநாடு உள்ளது, வல்லநாடு என்று ஒன்று உள்ளது. அந்தந்தப் பகுதி மக்கள் தனி மாநிலம் கோரினால் அதை அவர்களுக்கு ஏற்றுவாறு பிரித்துக் கொடுப்பது ஒரு அரசின் கடைமையாகும். அப்படிப் பிரிப்பதால் மாநில நிர்வாகம் நன்றாக இருக்கும்.

ஒன்றை எல்லோரும் நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். ஆந்திரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதைப் போல தேவை கருதி மாநிலங்கள் பிரிக்கப்படலாம்’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version