இந்தியா

ராகுல் காந்தி போன்ற தலைவர் தான் எங்களுக்கு வேண்டும்: பாஜகவில் முதல் ஆதரவு குரல்!

Published

on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜகவினர் பப்பு என கிண்டலடிப்பது வழக்கமான ஒன்று. ராகுல் காந்திக்கு எதிராக எப்போதும் ஆக்ரோஷமாக செயல்படும் பாஜகவில் இருந்து தற்போது ஆதரவு குரல் ஒன்று எழுந்துள்ளது. ராகுல் போன்ற தலைவர்கள் தான் வேண்டும் என கூறியுள்ளார் பாஜக எம்எல்ஏ ஒருவர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாய் சோனியா காந்தி ஆகியோர் தனிப்பட்ட பயணமாக கோவா சென்றிருந்தனர். அப்போது திடீரென கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார் ராகுல் காந்தி.

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து கோவாவின் பாஜக எம்எல்ஏவும் முக்கிய உறுப்பினருமான மைக்கேல் லோபோ கூறியபோது, ராகுல் காந்தி ஒரு எளிமையான, நல்ல தலைவர். மனிதநேயம் கொண்டவர். முதல்வருடன் நடைபெற்ற சந்திப்பில் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து, விரைவில் குணமடைய வாழ்த்தினார். அவரின் இந்த செயலுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ராகுல் போன்ற தலைவர்கள் எங்கள் கோவா மாநிலத்திற்கும், நம் நாட்டிற்கும் மிகவும் தேவை என்றார்.

seithichurul

Trending

Exit mobile version