செய்திகள்

நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு.. பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு….

Published

on

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு பல மாதங்களுக்கு முன்பு ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்காமலும், குடியரசு தலைவருக்கு அனுப்பாமலும் தமிழக ஆளுநர் சமீபத்தில் அதை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.

எனவே, அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டி அதில், மீண்டும் சட்டசபை கூட்டி நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. அதன்பின் இன்று சட்டசபையில் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு மசோதாவை திமுக அரசு நிறைவேற்றியது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Trending

Exit mobile version