தமிழ்நாடு

திமுகவுடன் பாஜக கூட்டணி… பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி!

Published

on

2021 சட்டப்பேரவை தேர்தலில், திமுகவுடன் பாஜக கூட்டணி வாய்ப்புள்ளதாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள கூட்டணி 2019 பாராளுமன்ற தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி. சட்டப்பேரவை தேர்தலுக்கு புதிய கூட்டணி அமையும்.

அது அதிமுகவுடனும் இருக்கலாம், திமுகவுடனும் இருகாலம். இல்லையென்றால் எங்களது தலைமையில் கூட்டணி அமைக்கலாம். தனித்து நிற்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்காலாம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மறுபக்கம் இன்று காலை, அதிமுக முதல்வர் வேட்பாளர்களை அறிவித்த பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்தித்த, பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது அதிமுக – பாஜக கூட்டணிதான். 2016-ல் தனித்துப் போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது. அதிலிருந்து போட்டியிடும் தொகுதிகளைத் தேர்ந்தெடுப்போம் என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version