இந்தியா

ஐந்தில் ஒரு வெற்றி கூட இல்லை: டெல்லி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு!

Published

on

டெல்லி நகராட்சியில் நடைபெற்ற வார்டு இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது என்றும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் 5 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. 5 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜகவுக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

டெல்லியில் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராத மத்திய பாஜக அரசுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

டெல்லியில் மொத்தம் உள்ள 272 வார்டுகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லியில் தற்போது தாங்கள் வெற்றி பெற்ற வார்டில் கூட திரும்பவும் வெற்றி பெற முடியாத நிலையில் பாஜக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தோல்வியுற்ற நிலையில் தற்போது டெல்லியிலும் அதே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, பொருளாதார தேக்கம் மற்றும் விவசாயிகள் போராட்டம் ஆகியவையே இந்த தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. இதே தோல்வி வரும் 5 மாநில தேர்தலில் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

seithichurul

Trending

Exit mobile version