இந்தியா

ஆப்கன், பாகிஸ்தான் பெண்கள் சுட்டு கொல்லப்பட்டபோது குரல் கொடுத்தீர்களா? மலாலாவுக்கு ஒரு கேள்வி!

Published

on

இந்தியாவில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்கும் நீங்கள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், பாகிஸ்தானில் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் குரல் கொடுத்தீர்களா என பாஜக பிரமுகர் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்ற பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இந்த பிரச்சினை குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தனது டுவிட்டரில் இந்திய தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஹிஜாப் அணியாததால் தாலிபான்களால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்துக்கள் என்பதாலேயே சீக்கியர்களும் இந்துக்களும் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம் நீங்கள் எங்கே போனீர்கள்? குரல் கொடுக்காதது ஏன்? நீங்கள் மதவாத இஸ்லாமிய ஜிகாதியை செயல் படுத்தி இருக்கிறீர்கள் என மலாலாவை விமர்சனம் செய்துள்ளார்.

மற்றொரு பாஜக தலைவர் ஒருவர் கூறியபோது பாகிஸ்தானில் இந்து பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட கொடுத்து நீங்கள் ஏன் பேசவில்லை? என்ன நடந்தது என்று தெரியாமலேயே பதிவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மலாலாவுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version