இந்தியா

ஸ்டாலினை எதிர்க்க தயார்.. குஷ்பு பேட்டி

Published

on

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் கூறியதைப் போலவே, பாஜக கொள்கைகளுடன் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடப்போவதாக குஷ்பு கூறியுள்ளார்.

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்,  இன்று மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குஷ்பு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ‘சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா, இல்லையா,  போட்டியிட்டால் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என எதுவும் தெரியாது. தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து மாநில பாஜக தலைவரும், தேசிய தலைவர்களும் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவீர்களா என்று கேட்டால், திமுக தலைவராக இருந்தாலும் சரி எதிர்கட்சி தலைவராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அவர்களை எதிர்த்து போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். போட்டியிட தயாராகவே இருக்கிறேன்’ இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version