இந்தியா

48 வயது பிரியங்காவை அழகிய இளம்பெண்ணாக சித்தரிக்கும் காங்கிரஸ்: பாஜக கடும் தாக்கு!

Published

on

உத்தரப் பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ள பிரியங்கா காந்தி இந்த மக்களவை தேர்தலையொட்டி களமிறக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி அரசியலில் குதித்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தி உபியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பிரியங்கா காந்தியை அழகிய இளம்பெண்ணாக காங்கிரஸ் முன்னிருத்துவதாக கேரளா பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை சர்ச்சைக்குறியவகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பி.எஸ்.ஸ்ரீதர் பிள்ளை, காங்கிரஸ் கட்சி சீரழிவு நிலையில் உள்ளது. 48 வயதாகும் பிரியங்கா காந்தியை அழகிய இளம்பெண்ணாக முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் பிரிவினைவாதத்தினை ஆதரிக்கும் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவை நாடியுள்ளார் என கூறியுள்ளார்.

Trending

Exit mobile version