தமிழ்நாடு

நள்ளிரவில் தமிழக பாஜக பிரமுகர் கைது: 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Published

on

நேற்று நள்ளிரவில் திடீரென பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அடுத்து பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக பிரமுகர்களில் ஒருவர் கல்யாண்ராமன் என்பதும் இவர் இரு குழுக்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் டுவிட்டரில் கருத்தை பதிவு செய்ததால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரு குழுக்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கல்யாண்ராமன் பதிவு செய்ததாகவும் இதனையடுத்து கோபிநாத் என்பவர் புகார் கொடுத்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் கல்யாண்ராமன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று நள்ளிரவு அவரை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக பிரமுகர் கல்யாண்ராமன் கைது செய்யப்பட்டுள்ள அடுத்து பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசிய புகார் ஆளும் பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சார கூட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கல்யாண்ராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது குறித்து தர்மபுரி எம்பி செந்தில் குமார் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

 

 

seithichurul

Trending

Exit mobile version