தமிழ்நாடு

வேலூர் தேர்தல் தோல்விக்கு காரணம் பாஜக தான்: ஏ.சி.சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!

Published

on

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் வேலூர் தேர்தலில் தான் தோற்றதற்கு பாஜக கொண்டு வந்த மசோதாக்கள் தான் காரணம் என ஏ.சி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வேலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம், வேலூர் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக என்ஐஏ சட்டத்திருத்த மசோதா வந்தது. அதற்கு நான்கு நாட்கள் முன்னர் முத்தலாக் சட்டம் வந்தது. தேர்தல் நாளன்று காஷ்மீரின் 370-வது சட்டப் பிரிவை நீக்கும் மசோதா கொண்டுவரப்பட்டது. அன்று 4 மணி வரையிலும் சிறுபான்மையின மக்கள் வாக்களிக்கவில்லை. அவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாகவே இருந்தனர். ஆனால், அதன் பிறகு சில தலைவர்கள் களமிறங்கி அவர்களை வாக்களிக்க வைத்துள்ளனர்.

இஸ்லாமிய மக்கள்தான் திமுகவுக்குக் கைகொடுத்திருக்கிறார்கள். வாணியம்பாடியில் 22,000 வாக்குகள் திமுகவுக்குச் சென்றது. அதுபோலவே ஆம்பூர் தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் 300 வாக்குகள் வரை அதிகம் பெற்றோம். ஆனால், குறிப்பிட்ட ஆறு வார்டுகளில் மட்டும் திமுக 30,000 வாக்குகள் பெற்றது. இந்த இரண்டும் திமுகவின் வெற்றிக்கு வலுவாக இருந்தது. இல்லையெனில் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார்கள் என்றார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, ஏ.சி.சண்முகம் ஏன் அவ்வாறு சொல்கிறார் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். 370-வது பிரிவை நீக்கியதற்காக அந்தப் பகுதி மக்கள்கூட வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆகவே ஏ.சி.சண்முகம் சொல்வது தவறு. 370 நீக்கம் ஏ.சி.சண்முகத்தின் வெற்றிக்கான வாக்குகளை அதிகப்படுத்தி தந்திருக்கும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version