தமிழ்நாடு

பாஜக விரக்தியில் உள்ளது: டிடிவி தினகரன் பாய்ச்சல்!

Published

on

சமீப காலமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முன்னதாக விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷிமிட்ட சோபியா என்ற மாணவி மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க முயற்சித்ததில் தமிழிசை சரச்சையில் சிக்கினார்.

தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தமிழிசையிடம் கேள்வி கேட்க முயன்ற ஆட்டோ டிரைவரை பாஜகவினர் தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், பொதுவாழ்க்கைக்கு
வந்த பிறகு நம்மிடம் யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும்.
என்னிடமும் பல கேள்வி கேட்கிறார்கள். நானும் பதில் சொல்கிறேன். சிலர்
என் மீது குறைகள் கூட சொல்லலாம். அதனையெல்லாம் எதிர்கொண்டு
அதற்கு பதில் சொல்ல வேண்டும். மாறாக கேள்வி கேட்டார்கள் என்பதற்காக
தாக்க கூடாது.

பாஜக விரத்தியில் இருப்பதால் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை
அடித்துள்ளார்கள். பொதுவாழ்விற்கு வந்த பிறகு வாக்கு கேட்க
செல்லும்போது மக்களை அவர்களின் வீட்டுக்கே சென்று காலில் விழுந்து
வாக்கு கேட்கும் நாம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்
சொல்லித்தானே ஆக வேண்டும். கேட்வி கேட்பவர்களை தாக்குவதுதான்
பாஜகவின் கலாச்சாரமாக இருக்கிறது என்றார் காட்டமாக.

seithichurul

Trending

Exit mobile version