இந்தியா

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு

Published

on

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பல அதிரடியான திட்டங்களை அமுல்படுத்தியது. இதில், 3 வேளாண் சட்டங்களும் ஒன்று. ஆனால், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக அரசு எதிர்ப்பை மீறி இந்த திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இதைத்தொடர்ந்து பஞ்சாப், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டத்தில் சிலர் இறந்தும் போனார்கள். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் மழையிலும், வெயிலிலும், குளிரும் போராட்டி வந்த நிலையில் இந்த 3 வேளாண் சட்டங்களும் இன்று முதல் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இன்று நாட்டுமக்களிடையே உரையாடிய போது அவர் இந்த அறிவிப்பை வெளிட்டார்.

ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராடி வந்த நிலையில், இந்த விவகாரம் அடுத்த வருடம் உத்தரபிதேசாம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதால் பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்த செய்தி இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version