இந்தியா

குடியரசு தினவிழாவில் காந்தியின் விருப்பப் பாடல் நீக்கம்… ஒன்றிய அரசு ஓரவஞ்சனை….

Published

on

குடியரசு தின விழாவின் நிறைவில் இசைக்கப்படும் காந்தியின் விருப்பப் பாடலை மத்தியில் ஆளும் பாஜக அரசு நீக்கியுள்ளது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் கடந்த சில நாட்களாக குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. பொதுவாக இந்த விழா நிறைவு பெறும்போது மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த ‘Abide with me’ என்கிற பாடல் ஒலிபரப்பப்படும். அந்த பாடலை மத்திய அரசு நீக்கிவிட்டது. கடந்த ஆண்டும் இந்த பாடல் நீக்கப்பட்ட போது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த ஆண்டும் பாடல் நீக்கப்பட்டுள்ளது.

republic

ஏற்கனவே, வாகன அணிவகுப்பில் தேசிய அளவில் பிரபலமானவர்கள் இல்லை எனக்குறி ஒன்றிய அரசு தமிழகத்தை நிராகரித்தது. தமிழக அரசின் வாகனத்தில் வ.உ.சி மற்றும் வேலுநாச்சியார் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்து. ஆனால், அவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக்கூறி ஒன்றிய அரசு தமிழகத்தை நிராகரித்தது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பலரும் இதை கடுமையாக விமர்சித்தனர்.

தமிழகம் மட்டுமல்ல தென் தமிழகத்தில் பாஜக ஆட்டி நடைபெறாத தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய எந்த மாநிலங்களின் வாகனமும் இதில் இடம் பெறவில்லை. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடக மாநிலத்தின் அலங்கார வாகனத்திற்கு மட்டுமே ஒன்றிய அரசு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version