தமிழ்நாடு

பாஜகவுக்கு துணை முதல்வர் பதவியா? புதுச்சேரியில் பரபரப்பு!

Published

on

புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளதால் இந்த கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனை அடுத்து இன்று ஆட்சி அமைக்க ரங்கசாமி உரிமை கோருவார் என்றும் இன்னும் ஓரிரு நாளில் அவர் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர்கள் யார் யார் என்ற தகவல் கசிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பாஜக துணை முதல்வர் பதவி ஏற்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

துணை முதலமைச்சர் உள்பட 2 அமைச்சர் பதவிகளை பாஜக கேட்டு வருவதாகவும் நமசிவாயம் துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதேபோல் முக்கிய அமைச்சர் பதவிகளையும் பாஜக கேட்டு வருவதால் பாஜக என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

ஏற்கனவே என்ஆர் காங்கிரஸில் உள்ள 10 எம்எல்ஏக்களில் 6 எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவியை குறிவைத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்றாலும் என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுக்கு கண்டிப்பாக அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ரங்கசாமி தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version