தமிழ்நாடு

லாவண்யா தற்கொலை விவகாரம்: 4 நபர்கள் குழுவை அமைத்தது பாஜக!

Published

on

மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய நான்கு நபர் குழுவை பாஜக மேலிடம் அமைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி லாவண்யா தான் படித்த பள்ளியை சேர்ந்தவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட சொல்லி வற்புறுத்தியதாகவும் அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியிருந்த வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென இன்று வெளியான ஒரு வீடியோவில் மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல என்றும் சகாயமேரி என்பவர் வேலை வாங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இரண்டு மாறுபட்ட வீடியோ மக்களால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மேலிடம் தற்போது இது குறித்து விசாரணை செய்ய குழு ஒன்று அமைத்து உள்ளது. இந்த குழுவில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தியா ராய், தெலுங்கானாவை சேர்ந்த விஜய் சாந்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த சித்ரா தாய் ஹாஹ், மற்றும் கர்நாடகாவை சேர்ந்த கீதா விவேகானந்தா ஆகிய நால்வர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாணவியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று விசாரணை செய்வார்கள் என்றும் அதன்பின் விசாரணை குறித்த அறிக்கையை பாஜக தலைவர் ஜேபி நட்டா அவர்களிடம் சமர்ப்பிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த விவகாரம் இன்னும் சூடு பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version