இந்தியா

பாஜக பிரபலம் சந்தன் மித்ரா காலமானார்: அரசியல் பிரபலங்கள் இரங்கல்!

Published

on

பாஜக பிரபலம் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மித்ரா காலமானதை அடுத்து அரசியல் பிரமுகர்கள் அவரை அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்

பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை எம்பியும் மூத்த பத்திரிகையாளருமான சங்கன் மித்ரா டெல்லியில் நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகன் குஷன் மித்ரா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பதும் மறைந்த சங்கமித்ரா வயது 66 என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சங்கன் மித்ரா மறைவிற்கு அனைத்து கட்சியின் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராக சந்தன் மித்ரா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2018ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சந்தன் மித்ரா பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version