தமிழ்நாடு

பாஜக வேட்பாளர் பட்டியல்: குஷ்பு போட்டியிடுவது எங்கே?

Published

on

அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து ஆலோசனை நேற்று இரவு நடந்த நிலையில் சற்றுமுன் 6 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

மீதி உள்ள 14 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல் இதோ:

கோவை தெற்கு – வானதி சீனிவாசன்

அரவக்குறிச்சி – அண்ணாமலை

ஆயிரம் விளக்கு – குஷ்பூ

தாராபுரம் – எல்.முருகன்

காரைக்குடி – எச்.ராஜா

நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி

Trending

Exit mobile version