இந்தியா

5 மாநிலங்களிலும் பாஜக தோல்வி: காங்கிரஸ் வெற்றிவாகை!

Published

on

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அந்த மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழக்கிறது, அங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் இழுபறி நீடித்தாலும் ஒரு சில இடங்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் அங்கும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் தெலங்கானாவில் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய முன்னணி ஆகியவை முன்னிலையில் உள்ளன. மத்திய பிரதேசத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் என தெரிவித்துள்ளது. அந்த கட்சி தற்போதைய நிலவரப்படி 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மத்திய பிரதேசத்திலும் பாஜக ஆட்சியை இழந்து காங்கிரஸ் அங்கு கூட்டணி ஆட்சியை அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பாஜக தோல்வியை தழுவ உள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முன்னோட்டமாக பார்க்கபடுகிறது. பாஜகவுக்கு எதிரான இந்த அலை பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என கூறப்படுகிறது. நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version