தமிழ்நாடு

உதயநிதியை தகுதி நீக்கம் செய்யுங்கள்: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Published

on

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் உதயநிதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் நாளையும் மட்டுமே பிரச்சாரம் இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவரது பிரச்சாரத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரசாரம் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். மோடியின் தொல்லை தாங்காமல்தான் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் இறந்துவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அருண்ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர்களின் மகள்கள் உதயநிதிக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் தேசிய தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்

இந்த நிலையில் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை வேட்பாளர் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரது பிரச்சாரத்திற்கும் தடைவிதித்து நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் உதயநிதி மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version