இந்தியா

அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல்? மருத்துவமனையில் அனுமதி!

Published

on

பாஜக தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷாவுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமித்ஷா பாஜகவின் தேசிய தலைவராக உள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவருக்கு துணையாக இருந்தவர், தற்போது மோடி நாட்டின் பிரதமராக இருக்கும் போதும் அவருக்கு பக்கபலமாக இருக்கிறார் அமித்ஷா. மோடி வகுக்கும் அரசியல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதில் வெற்றி காண்பதில் அமித்ஷா கைதேர்ந்தவர் எனலாம்.

மோடி பிரதமர் ஆன பின்னர் தான் அமித்ஷா பாஜகவின் தேசிய தலைவர் ஆக நியமிக்கப்பட்டார். அமித்ஷா தலைவர் ஆன பின்னர் பாஜக தேசிய அளவில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அசுர பலத்தில் உள்ள பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டணி வைக்க ஒன்றுகூடியுள்ளதே அமித்ஷாவின் தலைமைத்துவத்துக்கு சான்றாகும்.

இந்நிலையில் காய்ச்சல் இருப்பதாக திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக தலைவர் அமித்ஷாவை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version