தமிழ்நாடு

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் பாஜக: மோடி பெயர் இருட்டடிப்பா?

Published

on

அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது என்பதும் அந்த கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே. இருப்பினும் பாஜகவின் இன்னொரு முகம்தான் அதிமுக என்றும் பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது பாஜகவினர் தாங்கள் ஓட்டு கேட்க செல்லும் இடத்தில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் படங்களை வைத்து ஓட்டு கேட்டு வருகிறார்கள் என்றும் மோடி மற்றும் பாஜக தலைவர்களின் படங்கள் இல்லாமல் வாக்கு சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக பாஜக மாநில தலைவர் எல் முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியிலும், அண்ணாமலை போட்டியிடும் அரவக்குறிச்சி தொகுதியிலும் மோடியின் பெயரோ கட்சியின் பெயர் இடம்பெறாமல் எம்ஜிஆரின் சின்னம் என்றும் அம்மாவின் சின்னம் என்றும் சுவர்களில் விளம்பரம் வரைந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மோடியின் பெயர் என்றாலே தமிழகத்தில் அலர்ஜி என்பதால் அவரது பெயரை பயன்படுத்த பாஜகவினர் தயங்கி வருகின்றனர் என்பதும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயரை சொன்னால் கிடைக்கும் என்பதால் எம்ஜிஆர் பெயரை சொல்லி ஓட்டு கேட்டு வருவதாகவும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

மோடி பெயரை இருட்டடிப்புச் செய்தாலும் பரவாயில்லை தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருவதற்கு பாஜக தலைமையும் அனுமதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில இடத்தில் மோடியின் ஆதரவு பெற்ற சின்னம் என்று சுவர்களில் விளம்பரம் வரையப்பட்டிருந்த நிலையில் தற்போது மோடி பெயரை அழித்து உள்ளதும் தெரியவந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version