தமிழ்நாடு

குஷ்பு, எச்.ராஜா, அண்ணாமலை, எல்.முருகன் வெற்றி பெறுவார்களா? கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் வெளிவந்தன. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் திமுகவுக்கு 160 முதல் 190 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் அதிமுகவுக்கு அதிகபட்சமாக 50 முதல் 60 தொகுதிகள் வரை தான் கிடைக்கும் என்று கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிகபட்சமாக இரண்டு இடங்கள் கிடைப்பதே அரிது என்று அந்த கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்தநிலையில் தமிழகத்தை பொருத்தவரை பாஜக நட்சத்திர வேட்பாளர்களான குஷ்பூ, ஹெச் ராஜா, அண்ணாமலை, எல் முருகன் ஆகியோர் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் மேற்கண்ட நால்வருமே தோல்வி முகத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது பாஜகவினர் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version