தமிழ்நாடு

ஒரே வாக்குமட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர்: குடும்ப உறுப்பினர்களே மொத்தம் 5 பேர்!

Published

on

சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் திமுக அமோக வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் வரை கிடைத்த தகவலின்படி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் 77 பேர் முன்னிலையில் உள்ளனர் என்பதும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் 98 பேர் முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தான் முன்னிலையில் இருந்து வருகின்றனர் என்பதும் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்றும் அதுபோல் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்பட பல கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் முன்னிலை நிலவரங்கள் கூறிவருகின்றன.

இந்த நிலையில் தேர்தல் களத்தில் பாஜகவும் போட்டியிட்ட நிலையில் கோவை உள்ளாட்சி தேர்தல் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

பாஜக வேட்பாளரின் குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 5 பேர் உள்ள நிலையில் அவருக்கு ஒரு வாக்கு கிடைத்துள்ளதை பார்க்கும்போது அவருக்கு அவருடைய குடும்ப உறுப்பினர்களே ஓட்டு போடவில்லை என்பது தெரிய வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version