தமிழ்நாடு

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா: பத்திரம் எழுதி கொடுத்த பாஜக வேட்பாளர்!

Published

on

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற விட்டால் ராஜினாமா செய்துவிடுவேன் என உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்து பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து திமுக, அதிமுக, பாஜக உள்பட அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக உள்ளனர். அதேபோல் முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம், பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் 24 வது வார்டில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் மூன்றாவது அணியாக பாஜக வேட்பாளர் சன்னாசி பாபு என்பவர் வித்தியாசமான முறையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்.

அவர் பொதுமக்களிடம் 21 வாக்குறுதிகளை அளித்து உள்ளார். இந்த 21 வாக்குறுதிகளையும் ஆறு மாதங்களில் நிறைவேற்றாவிட்டால் நகரமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். வெறும் வாய் வார்த்தையோடு மட்டுமின்றி பத்திரம் எழுதிக் கொடுத்து பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்து வருகிறார். அவரது வித்தியாசமான பிரச்சாரம் திமுக அதிமுக வேட்பாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version