இந்தியா

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்!

Published

on

முன்னாள் நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 66. இவரது இந்த திடீர் மரணம் பாஜக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்தியது என இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அருண் ஜெட்லி. பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியை திறமையாக கையாண்டவர் அருண் ஜெட்லி. இவர் கடந்த ஆண்டே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சையும் மேற்கொண்டார்.

இதனையடுத்து இவரது பணியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கவனித்து வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து வந்து மீண்டும் தனது பணியை தொடர்ந்தார். இந்நிலையில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தபோது, அருண் ஜெட்லியின் உடல்நிலை காரணமாக அவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை. நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அருண் ஜெட்லி காலமானார்.

seithichurul

Trending

Exit mobile version