தமிழ்நாடு

கமல் சீரியஸ் அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு பதில் கூறுவேன்: அண்ணாமலை

Published

on

கமல் சீரியஸ் அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு நான் பதில் கூறுவேன் என தமிழ்க பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை மேலும் கூறியதாவது:

தேர்தல் நாளன்று குமரி முதல் சென்னை வரை திமுகவினர் அலங்கோலம் , அராஜகம் செய்தனர். வாக்குச் சாவடியின் உள்ளேயே பணப் பட்டுவாடா செய்ததுடன் , கொரோனா வாக்காளர்களுக்கான நேரத்தில் வாக்குச்சாவடியை பூட்டி வைத்து சிசிடிவியை அணைத்து கள்ள வாக்கு செலுத்தியுள்ளனர்.

பாஜகவினர் பல இடத்தில் தாக்கப்பட்டுள்ளனர் , திருவண்ணாமலை , மதுரை திருமங்கலம் போன்ற இடங்களில் பாஜக நிர்வாகிகளும் வேட்பாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். கோவை சென்னையில் அதிக வன்முறை நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், கோவை 63 வது வார்டெக்கு கரூரை சேர்ந்த திமுகவினர் வாக்களிக்க வந்துள்ளனர். அவர்களை பாஜகவினர் சிறைபிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். சென்னை வார்டு 88ல் திமுகவினர் கள்ள வாக்கு செலுத்தினர். வார்டு 141 ல் செய்தியாளர் மீது தாக்குதல் நடந்துள்ளது. பெசன்ட் நகரில் திமுகவினரால் வாக்குப் பதிவு எந்திரம் உடைக்கப்பட்டுள்ளது. வார்டு 40 43, 48, 49, 51ல் முறைகேடு நடந்துள்ளது.

பிகார் மாதிரியில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. வேளச்சேரி டான்சி நகரில் திமுக குண்டர்களுக்கு பயந்து பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. சென்னையில் 40 வாக்குச்சாவடி வரை திமுகவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. திருச்சியில் திமுக வேட்பாளர் ஒருவர் 2 முறை வாக்களித்துள்ளார். நடந்த அனைத்தையும் தேர்தல் ஆணையம் கண் மூடி வேடிக்கை பார்த்துள்ளது என்று அண்ணாமலை விமர்சித்தார்.

2012 உள்ளாட்சி 72 சதவீதாத்திற்கு மேல் வாக்கு பதிவானது. தற்போது வாக்கு சதவீதம் குறைய காரணம் திமுகவினரின் அட்டூழியம்தான் என்று குற்றம் சாட்டிய அவர், டிஜிபியும் , தேர்தல் ஆணையமும் தேர்தல் அமைதியாக நடந்ததாக கூறுவது நகைப்புக்குரியது. நாளை நேர்மையாக வாக்கு எண்ணிக்கை நடைபெறாது என்பதே தனது கணிப்பு என கூறினார்.

நாளை இரவு 7 மணி வரை வெற்றிச் சான்றிதழை வழங்க கூடாது என திமுகவினர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட அண்ணாமலை, வாக்கு எண்ணிக்கை நாளைதான் நடைபெற உள்ளது , எனவே இன்னும் நேரம் இருப்பதால் , முறைகேடு நடந்ததாக நாங்கள் குற்றம்சாட்டியுள்ள வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடந்த வேண்டும் எனவும் , வாக்கு எண்ணிக்கையின்போதே , வெற்றிபெறுவோருக்கு உடனுக்குடன் வெற்றிச் சான்றிதழை வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட உள்ளதாக தெரிவித்தார்.

கோவையில் முதலமைச்சர் , வேட்பாளர் , மாவட்ட அமைச்சர்களின் படத்துடன் ஹாட் பாக்ஸ் விநியோகம் நடந்துள்ளது. அதை பிடித்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என காவல்துறையினர் மிரட்டப்பட்டுள்ளனர் . திமுகவினர் கத்திக் குத்து நடந்தால் மட்டுமே அதை வன்முறை என்பார்களா..? தேர்தல் நாளில் பல வன்முறை நடந்துள்ளது. ஆனால் அமைதியாக நடந்ததாக திமுகவினர் கூறுவது ஆச்சரியாமக உள்ளதாக குறிப்பிட்டார்

அராஜகம் செய்த திமுக அதிகாரத்திற்கு வரக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகவும். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பிறகு தங்களது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறிய அண்ணாமலை, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களின் மீது 100 விழுக்காடு நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.

விக்ரம் படத்தில் நடிப்பதா , பிக் பாசில் நடிப்பதா என கமல் ஹாசன் குழப்பத்தில் இருக்கிறார். கமல் சீரியஸ் அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு நான் பதில் கூறுவேன். அவர் மக்களுக்காக என்ன செய்கிறார்..? சாதி மத அரசியல் செய்வதாக எதை வைத்து பாஜக மீது குற்றம் சாட்டுகிறார்..? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அரசியல்வாதி போல் இல்லாமல் காவல்துறை அதிகாரி போல நீங்கள் நடந்து கொள்வதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, ” திமுகவிற்கு எதிராக நான் போலிஸ்காரன் போல இருந்தால்தான் சில விசயங்களை செய்ய முடியும் போல. பழைய அட்ஜஸ்ட்மெண்ட் அரசியல்வாதியாக இருந்தால் மக்களுக்கு நல்லதல்ல என்றார்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version