இந்தியா

தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு பாஜக ஆட்சியில் தான் அதிக நிதி ஒதுக்கீடு: ரயில்வே அமைச்சர்

Published

on

தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1000 மட்டுமே நிதியாக ஒதுக்கிய நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு பாஜக ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியை விட 7 மடங்கு அதிகமான ரூ.6362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.

மேலும் 2,749 ஹெக்டர் நிலம் தேவைப்பட்ட இடத்தில், 807 ஹெக்டர் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால், தமிழக அரசு நிலம் பெறும் நடவடிக்கையை விரைவாக மேற்கொண்டால், இந்த திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படலாம்” என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tamilarasu

Trending

Exit mobile version