இந்தியா

Assam- தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் பாஜக; டஃப் கொடுக்கும் காங்கிரஸ்- ஆட்சி யாருக்கு?

Published

on

அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளது.

அங்கு பல கட்டங்களாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணி முதல் தற்போது வரை எண்ணப்பட்டு வரும் வாக்குகளின் நிலவரப்படி, பாஜக கூட்டணி சுமார் 80 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி, சுமார் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 இடங்களில் 64 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே ஆட்சியமைத்து விடலாம். இந்த முறை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.

அதே நேரத்தில் பாஜக, தற்போது வரை 56 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்த படியாக காங்கிரஸ் 29 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. ஒரு சில தொகுதிகளில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்பதால் அசாம் தேர்தல் முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version