இந்தியா

ஆப் மூலம் டோர் டெலிவரி செய்யப்படும் தண்ணீர்: பிஸ்லெரி அதிரடி திட்டம்!

Published

on

மொபைல் ஆப் மூலம் 24 மணி நேரத்தில் தண்ணீர் டோர் டெலிவரி செய்யப்படும் என பிரபல மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கிராமம் முதல் நகரம் வரை அனைவரும் மினரல் வாட்டரை பயன்படுத்த தொடங்கி விட்டனர் என்பதை அடுத்து மினரல் வாட்டரின் தேவை அதிகரித்துள்ளது. இதனை கணக்கில் கொண்டு முன்னணி மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனமான பிஸ்லெரி, ஆப் மூலம் மினரல் வாட்டரை டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக புதிய ஆப் ஒன்றை தயார் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிரத்யேக ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தண்ணீர் தேவையை ஆர்டர் செய்தால் வீட்டு வாசலில் 24 மணி நேரத்தில் பெறமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர் 24 மணி நேரத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெலிவரி செய்யும் நிறுவனத்துடனும் பிஸ்லரி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு இடையில் தங்குதடையின்றி ரெகுலராக தண்ணீர் தேவைப்படுபவர்களுக்கு புதிய சந்தா முறையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலும் இந்த ஆப் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஸ்லரி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியபோது ’வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் பேக் செய்யப்பட்ட குடிநீரை டெலிவரி செய்யும் முதல் நிறுவனமாக எங்கள் நிறுவனம் மாறியுள்ளது என்றும் இந்த சேவையை பயன்படுத்த விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆப் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டு வாசலுக்கே பிஸ்லரி தண்ணீர் வரும் என்ற இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version